உள்ளூர் செய்திகள்

கந்தவகோட்டையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது - போலீசாரின் கண்காணிப்பை அதிகரிக்க பெற்றோர்கள் கோரிக்கை

Published On 2022-08-08 08:57 GMT   |   Update On 2022-08-08 08:57 GMT
  • சிவகுமார் (22), அவரிடமிருந்து ஒரு கிலோ 400 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது
  • கல்வி நிலையங்கள் அருகே காவலர்கள்காலை, மாலை நேரங்களில் கண்காணிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள முந்திரி காட்டில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஆதனக்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் உத்தரவின் பேரில் ஆதனக்கோட்டை சப் - இன்ஸ்பெக்டர் ராஜு மற்றும் காவலர்கள்முந்திரி காட்டில் தேடுதல் வேட்டை நடத்தினர்.அப்பொழுது சந்தேகத்து இடமான நபரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் பெருங்களூர் அருகே உள்ள அரியூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் (22), அவரிடமிருந்து ஒரு கிலோ 400 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பாக ஆதனக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி நபரை கந்தர்வகோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

சமீப காலமாக கல்வி நிலையங்கள் அருகே போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், பள்ளி மாணவர்கள் எதிர்காலம்பாதிக்கப்படும் எனவும், பெற்றோர்கள் கூறுகின்றனர். எனவே கல்வி நிலையங்கள் அருகே காவலர்கள்காலை, மாலை நேரங்களில் கண்காணிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News