தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம்
- மாவடட செயலாளரும், அமைச்சருமான எஸ்.ரகுபதி அழைப்பு தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது
- மாவடட செயலாளரும், அமைச்சருமான எஸ்.ரகுபதி அழைப்பு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்பின்னர் நடக்கும் முதல் பொது உறுப்பினர் கூட்டம் நாளை புதுக்கோட்டை மாலையீட்டில் உள்ள கற்பக விநாயகா திருமண மகாலில் காலை 10 மணிக்கு நடக்கின்றது.
தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ரகுபதி தலைமையில் நடைப்பெறும் கூட்டத்தில் அமைச்சர் பெருமக்கள், முன்னாள் - இந்நாள் சட்டமன்ற , பாராளுமன்ற உறுப்பினர்கள் , மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கழக முன்னோடிகள் அனைவரும் தவறாது கலந்துக் கொள்ள வேண்டும் என தனது அறிக்கையில் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டதுறை அமைச்சருமான எஸ்.ரகுபதி அழைப்பு விடுத்துள்ளார்.