உள்ளூர் செய்திகள்
புதுக்கோட்டையில் தனியார் நிறுவன ஊழியர் பேக்கில் ரூ. 1.68 லட்சம் கொள்ளை
- ஜெயகுமார் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கம்பெனியில் வசூல் செய்யும் ஏஜெண்டாக வேலை பார்த்து வருகிறார்.
- ஜெயக்குமார் புதுக்கோட்டையில் பல்வேறு கடைகளில் பணத்தை வசூல் செய்து கொண்டு தலைமை தபால் நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தார்
புதுக்கோட்டை,
திண்டுகல் மாவட்டம் செட்டிநாயக்கம் சத்யா நகரை சேர்ந்தவர் அர்ச்சுன பெருமாள் மகன் ஜெயகுமார் (வயது 47). இவர் அங்குள்ள தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கம்பெனியில் வசூல் செய்யும் ஏஜெண்டாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் வழக்கம் போல் அவர் புதுக்கோட்டையில் பல்வேறு கடைகளில் பணத்தை வசூல் செய்து கொண்டு தலைமை தபால் நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பழைய மருத்துவமனை அருகே வந்தபோது அவர் வைத்திருந்த டிராவல் பேக்கில் இருந்த வசூல் பணம் ரூ.1 லட்சத்து 68 ஆயிரத்தை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து ஜெயகுமார் கொடுத்த புகாரின்பேரில் புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.