உள்ளூர் செய்திகள்

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு கையேடு வழங்கும் விழா

Published On 2022-06-18 07:21 GMT   |   Update On 2022-06-18 07:21 GMT
  • பொன்னமராவதியில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு கையேடு வழங்கும் விழா நடை பெற்றது.
  • 453 தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

புதுக்கோட்டை:

பொன்னமவராவதி வட்டார வளமையத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு கையேடு வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.மணிவண்ணன் கலந்து கொண்டு, அண்ணா நகர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர் ஸ்ரீபிரியங்கா, இந்திரா நகர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர் ஜெயலட்சுமி ஆகியோருக்கு தன்னார்வலர் கையேடு, பட அட்டைகள், கதை ப்புத்தகங்கள் ஆகியவற்றை வழங்கினார்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதந்திரன், பொ ன்னமவராவதி வட்டாரக் கல்வி அலுவலர்கள் பொன்னழகு, ராமதிலகம், வட்டார வளமைய மேற்பார்வையாளர்( பொறுப்பு)நல்லநாகு, ஆசிரிய பயிற்றுநர்கள் கல்யாணி, முகம்மது ஆஷாத், யசோதா மற்றும் இல்லம் தேடி கல்வித்திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி,

இல்லம் தேடி கல்வி திட்ட ஒன்றிய ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் ராசு ஆகியோர் உடன் இருந்தனர். பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள மொத்தம் 453 தன்னார்வலர்களுக்கும் கையேடுகள் மற்றும் படக்கதைகள், கதைப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News