உள்ளூர் செய்திகள்

விராலிமலையில் பெரிய அய்யானார் கோவில் தேரோட்டம்

Published On 2022-07-17 10:14 GMT   |   Update On 2022-07-17 10:14 GMT
  • மண்டையூரில் பூர்ண புஷ்கலாம்பிகா சமேத பெரிய அய்யனார் கோவில் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது
  • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை விராலிமலை ஒன்றியம், மண்டையூரில் பூர்ண புஷ்கலாம்பிகா சமேத பெரிய அய்யனார் கோவில் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மண்டகப்படித்தாரர்கள் சார்பில், சுவாமிக்கு சிறப்பு வழிபாடு மற்றும் சுவாமி வீதி உலா நடைபெற்று வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் பெரிய அய்யனார் தேரில் எழுந்தருளினார். பின்னர் ேதரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

தேரை பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள், விழா கமிட்டியாளர்கள், மிராஸ்தார்கள் செய்திருந்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணியளவில் படுகளம், பாரிவேட்டையும் மாலையில் சாமிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News