உள்ளூர் செய்திகள்

கறம்பக்குடியில் காங்கிரஸ் சார்பில் கிராமபுறங்களில் பொது மக்களிடம் பிரசாரம்

Published On 2022-08-10 09:50 GMT   |   Update On 2022-08-10 10:17 GMT
  • காங்கிரஸ் கட்சியினர் தேசதந்தை மகாத்மா காந்தியடிகள் மற்றும் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களின் பெருமைகளை உணர்த்திடும் வகையில் தொடர் நடைபயண பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள்
  • பாத யாத்திரை நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தலைவர் ஒடுகம்பட்டி முருகேசன் தலைமை தாங்கினார்.

புதுக்கோட்டை :

தமிழகம் முழுவதும் இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தின திருநாளை போற்றும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் தேசந்தந்தை மகாத்மா காந்தியடிகள் மற்றும் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களின் பெருமைகளை உணர்த்திடும் வகையில் தொடர் நடைபயண பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியத்தில் ரெகுநாதபுரத்திலிருந்து ஊர்வலமாக மருதன்கோன்விடுதி, வாண்டான்விடுதி வழியாக கறம்பக்குடி வரை காங்கிரசார் ஊர்வலமாக சென்றனர். இந்த பாத யாத்திரை நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தலைவர் ஒடுகம்பட்டி முருகேசன் தலைமை தாங்கினார்.

இதில் கலந்துகொண்ட காங்கிரசார் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் குறித்தும் கிராம புறங்களில் வயல்வெளியில் வேலை செய்யும் ஆண்கள், பெண்களிடத்திலும் சுதந்திரத்திற்காக எந்த அரசு பாடுபட்டது என்பதையெல்லாம் எடுத்துக்கூறி, பா.ஜ.க. மக்கள் விரோத போக்கையும் விளக்கமாக எடுத்துக்கூறினர்.

நிகழ்ச்சிக்கு கறம்பக்குடி கிழக்கு வட்டாரத் தலைவர் ஞானசேகரன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் அந்தோனிராஜ், மாநில பொதுகுழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்திரசேகரன், கறம்பக்குடி நகர தலைவர் ரெங்கநாதன், வைமா.கண்ணன், மாவட்ட பொது செயலாளர்கள் அன்பழகன், கலியமூர்த்தி, அருணாச்சல தொண்டைமான், வெள்ளைச்சாமி மற்றும் பலர் இந்த பா யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News