உள்ளூர் செய்திகள்

உழவர் உற்பத்தியாளர் நிறுவன ஆண்டு பொதுக்குழு கூட்டம்

Published On 2022-09-29 09:12 GMT   |   Update On 2022-09-29 09:12 GMT
  • உழவர் உற்பத்தியாளர் நிறுவன ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது
  • இடு பொருள்கள் குறைந்த விலையில் கிடைக்கும்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா பெருமருதூரில் உழவர் உற்பத்தியாளர் நிறுவன ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் உமாபதி பிள்ளை,மணமேல்குடி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத் தலைவர் ஆர் ராதா கிருஷ்ணன், செயலாளர் மணிமொழியான், பொருளாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் வரவேற்று பேசினார்கள்.

வேளாண்துறை இயக்குனர் பெரியசாமி.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் தற்போதைய உலர் உற்பத்தியாளர் நிறுவனம் ஈரோடு துள்ளிய பண்ணை திட்ட அலுவலர் டாக்டர் கண்ணன் பாபு. வேளாண்மை அலுவலர் கந்தகிரி வாசன்ஆகியோர் முன்னில வைத்தனர்.

நிறுவனத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன் குழுவின் செயல்பாடு முன்னேற்றம் குறித்து பேசினார். மணமேல்குடி உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனம் 300 விவசாய பங்குதாரர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இவர்கள் செலுத்திய பங்கு தொகை ஒரு நபருக்கு 2 ஆயிரம் வீதம் மொத்தம் ஆறு லட்சம் உள்ளது. இதற்கு இணை பங்கு தொகையாக அரசிடம் இருந்து ரூபாய் 6 லட்சம் வந்துள்ளதால் இதனைக் கொண்டு வேளாண்மை இடு பொருள்களான விதை நெல், பூச்சி மருந்து , உரம் ஆகியவை குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் கடந்த மாதம் வியாபாரம் தொடங்கப்பட்டது, தொடங்கிய ஒரு மாதத்திலேயே ரூபாய் 20 ஆயிரம் லாபம் கண்டுள்ளோம் என்று பெருமிதம் கொண்டார். கூட்டத்தில் உதவி வேளாண்மை அலுவலர்கள் செல்வி, பார்கவி,தமிழ்மொழி உள்ளிட்ட நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News