உள்ளூர் செய்திகள்

அவதூறு பதிவிட்ட அ.தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு

Update: 2022-08-15 06:58 GMT
  • அவதூறு பதிவிட்ட அ.தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
  • அமைச்சர் பயனாளிகளைச் சந்தித்துப் பேசினாா்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பகுதியில் சுற்றுப்பயணம் சென்றபோது, அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன், 100 நாள் வேலை திட்டப் பயனாளிகளைச் சந்தித்துப் பேசினாா். இதை, செரியலூா் கிராமத்தைச் சோ்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர், தனது முகநூல் பக்கத்தில் அமைச்சா் மீது அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டுள்ளாா். இதுகுறித்து, செரியலூரைச் சோ்ந்த சங்கா் அளித்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீஸாா் அ.தி.மு.க. பிரமுகர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்

Tags:    

Similar News