உள்ளூர் செய்திகள்

மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. வழங்கிய போது எடுத்தபடம்.


கோவில்பட்டியில் நடனப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு - கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. வழங்கினார்

Published On 2023-01-23 06:45 GMT   |   Update On 2023-01-23 06:45 GMT
  • கோவில்பட்டியில் ஓபன் கேட் நடனப்பள்ளியின் சார்பில் 9-வது ஆண்டு நடனப் போட்டி நிகழ்ச்சி மந்திதோப்பு சாலையில் உள்ள சர்க்கஸ் மைதானத்தில் நடைபெற்றது.
  • தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் ஓபன் கேட் நடனப்பள்ளியின் சார்பில் 9-வது ஆண்டு நடனப் போட்டி நிகழ்ச்சி மந்திதோப்பு சாலையில் உள்ள சர்க்கஸ் மைதானத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மருத்துவர் காந்திராஜ், தொழிலதிபர் பெரியசாமி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடனப்பள்ளி நிறுவனர் முத்து வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, பரிசுகளும், சான்றிதழ்களையும், வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மருத்துவர்கள் பத்ம பிரகாஷ், நர்மதா தேவி, பாலமுருகன், துறை பத்மநாபன், யூனியன் துணை சேர்மன் பழனிச்சாமி, நகர ஜெயலலிதா பேரவை ஆபிரகாம் அய்யாதுரை, கோபி, குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சேலம் தங்கமாளிகை உரிமையாளரும், தொழிலதிபருமான பிரகாஷ், தொழிலதிபர் பிரண்ட் பேஜ் கார்மெண்ட்ஸ் உரிமையாளர் முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் மாணவி சாதனா நன்றி கூறினார்.

Tags:    

Similar News