உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்.

தஞ்சையில் நாளை பெண்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம்

Published On 2022-11-21 10:02 GMT   |   Update On 2022-11-21 10:02 GMT
  • 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், பட்டப்படிப்பு, டிப்ளமோ முடிக்காதவர்களாகவும் இருக்க வேண்டும்.
  • விருப்பமும் உள்ளவர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக் குறிப்பு ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொள்ளலாம்.

தஞ்சாவூர்:

தஞ்சைமாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலை தேடும் பெண்களுக்காக ஓசூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்திற்கு பெண் பணியாளர்களை தேர்வு செய்யும் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இந்த முகாமில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், பட்டப்படிப்பு, டிப்ளமோ முடிக்காதவர்களாகவும் இருக்க வேண்டும்.

இவர்கள் 18 வயது முதல் 26 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

நாளை காலை 8 மணி முதல் 10 மணிக்குள் நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்பவர்களுக்கு தொடர்ந்து காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நேர்காணல் நடைபெறும். இந்த முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக் குறிப்பு ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 8110919990, 9442557037 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News