உள்ளூர் செய்திகள்

ஓடும் பேருந்தில் நகையை திருட முயன்ற வாலிபர் கைது

Published On 2022-12-08 14:44 IST   |   Update On 2022-12-08 14:44:00 IST
  • ஓடும் பேருந்தில் நகையை திருட முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்
  • திருட முயன்றவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

பெரம்பலூர்:

திருச்சி மலைக்கோட்டை மகலா நேரு நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது29). இவர், திருச்சியிலிருந்து உளுந்தூர் பேட்டையில் உள்ள அவரது மனைவி மற்றும் குழந்தைகளை பார்தது வருவதற்காக அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். பேருந்து சிறுவாச்சூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, மணிகண்டன் அருகில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் மணிகண்டன் சட்டைப் பையில் இருந்த செல்போனை எடுத்துக்கொண்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் ெசயினை திருட முயன்றார். அப்போது. சுதாரித்துக்கொண்ட மணிகண்டன் நகையை திருட முயன்றவரை பிடித்து பெரம்பலூர் போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில் நகையை பறிக்க முயன்றவர் சென்னை சோழிங்க நல்லூர், காந்தி தெருவை சேர்ந்த சரவணன்(35) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News