உள்ளூர் செய்திகள்

கிடப்பில் போடப்பட்ட கழிவறை கட்டிட பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

Published On 2022-12-12 16:05 IST   |   Update On 2022-12-12 16:05:00 IST
  • கிடப்பில் போடப்பட்ட கழிவறை கட்டிட பணியை விரைந்து முடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
  • பொதுமக்கள் நலன் கருதி

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்துக்குட்பட்ட அகரம்சீகூர் ஊராட்சியில் உள்ள காலனி பகுதியில் சமுதாய சுகாதார வளாக கழிப்பறை கட்டிடம் கட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதனையடுத்து அகரம்சீகூர் புதிய காலனி பகுதியில் உள்ள பொது இடத்தில் கட்டப்பட்ட கழிப்பறையின் கட்டுமானப் பணிகளை சிறிது காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனால் அங்கு வசிக்கும் பொது மக்கள் அகரம்சீகூர் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் முன்பகுதியில் திறந்த வெளியில் மலம் கழிக்கும் சூழல் உள்ளது. இதனால் பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் மிகவும் மன உளைச்சலுக்கும் சிரமத்திற்கும் ஆளாகின்றனர்.

அந்த வழியே செல்லும் பொதுமக்களும் மூக்கை பிடித்துக் கொண்டு சாலையை கடக்க நேரிடும் நிலை உள்ளது.

தற்போது மழைக்காலம் என்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. பெண்களுக்கு உடல் ரீதியான கிருமிகள் தாக்குதல் அபாயத்திற்கு வழி உள்ளதாகவும் . இயற்கை உபாதைகளை கழிக்க அப்பகுதி பொதுமக்கள் இருள்வரும் வரை காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது.

எனவே பொதுமக்கள் நலன் கருதி அகரம்சீகூர் காலனி பகுதியில் கிடப்பில் உள்ள கழிப்பறைகளின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க சமூக ஆர்வலர்களும், அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News