உள்ளூர் செய்திகள்

பொறியியல் கல்லூரி மாணவர்கள் மலேசியா பயணம்

Published On 2023-10-11 07:08 GMT   |   Update On 2023-10-11 07:08 GMT
  • பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மலேசியா பல்கலைக்கழகத்திற்கு பயணம் மேற்கொள்கின்றனர்
  • சர்வதேச மாணவர் பரிமாற்ற திட்டத்தின் கீழ் மலேசியா செல்கின்றனர்

பெரம்பலூர்,

சர்வதேச மாணவர் பரிமாற்ற திட்டத்தின் கீழ் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மலேசியா மல்டிமீடியா பல்கலைக்கழகத்திற்கு செல்லும் மாணவர்களை வாழ்த்தி, வழியனுப்பும் விழா நடைபெற்றது.பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்து, மாணவர்களை வாழ்த்தி, சர்வதேச மாணவர் பரிமாற்ற திட்டத்தின் பயன்கள் குறித்து பேசினார்.சர்வதேச மாணவர் பரிமாற்ற திட்டத்தின் கீழ் நமது தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பயிலும் 17 மாணவர்கள் மற்றும் 3 மாணவிகளும் கல்லூரி முதல்வர் இளங்கோவன், புல முதல்வர் அன்பரசன் ஆகியோர் மலேசியா மல்டி மீடியா பல்கலைக் கழகத்திற்கு செல்கின்றனர்.இவர்கள் அனைவரும் வருகின்ற 14 -ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மலேசியாவில் இந்த திட்டத்தின் கீழ் நடத்தப்படும் நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றனர்.

இந்த் திட்டத்தின் கீழ் செல்லும் மாணவர்களுக்கு செய்முறை அறிவு மற்றும் படைப்பாற்றலை அதிகரிக்க உதவும், உலகம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு புதுமையான தீர்வுகளை உருவாக்க உதவும்.தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரிக்கும் மலேசியா மல்டிமீடியா பல்கலைக்கழகத்திற்கும் இடையே வருகின்ற 16-ந் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது. என தெரிவித்தார்.நிகழ்ச்சியின் போது கல்லூரி முதல்வர் இளங்கோவன், திறன் மேம்பாட்டு அதிகாரி சஷீதா, டீன்கள் அன்பரசன், சிவராமன், சண்முகசுந்தரம் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வேல்முருகன், மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News