தமிழ்நாடு செய்திகள்

ஜி.கே.வாசன்-தம்பித்துரை உள்பட தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவி காலம் ஏப்ரலில் முடிகிறது

Published On 2025-12-10 14:52 IST   |   Update On 2025-12-10 14:52:00 IST
  • 6 இடங்களில் தி.மு.க. சார்பில் 4 பேரும் அ.தி.மு.க. சார்பிலும் 2 பேரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  • யார் யாருக்கு மீண்டும் எம்.பி. பதவி கிடைக்கும் என்பது விரைவில் தெரிந்து விடும்.

சென்னை:

தமிழகத்தின் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி இடங்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் காலியாகிறது.

இதன் காரணமாக 6 இடங்களுக்கு சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடத்தப்படுகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் தி.மு.க. சார்பாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு ஆகியோரும் அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரை மற்றும் கூட்டணி கட்சியான த.மா.கா. சார்பில் அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசனும் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த 6 பேரின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக பிப்ரவரி மாதம் 6 இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, ஏப்ரல் 1-ந்தேதிக்குள் இந்த இடங்களுக்கான தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள உள்ளது.

இந்த 6 இடங்களில் தி.மு.க. சார்பில் 4 பேரும் அ.தி.மு.க. சார்பிலும் 2 பேரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் யார் யாருக்கு மீண்டும் எம்.பி. பதவி கிடைக்கும் என்பது விரைவில் தெரிந்து விடும்.

Tags:    

Similar News