உள்ளூர் செய்திகள்
அம்பேத்கர் சிலை அமைக்க விசிக கோரிக்கை
- அம்பேத்கர் சிலை அமைக்க விசிக கோரிக்கை மனு அளித்தனர்
- வேப்பூர் யூனியன் அலுவலகம் முன்பு கூட்டம் நடைபெற்றது
பெரம்பலூர்:
அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் தொல். திருமாவளவன் ஆணைக்கிணங்க ஒன்றிய அலுவலகங்களில் அம்பேத்கர் புகைப்படம் வைக்கவும். ஒன்றிய அலுவலகம் முன்பு அம்பேத்கர் முழு உருவ சிலையை அமைத்திடவும். வேப்பூர் ஒன்றிய பெருந்தலைவர் பிரபா செல்லப்பிள்ளையிடம், கோரிக்கை மனுவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றிய செயலாளர் வரதராசன் வழங்கினார்.