உள்ளூர் செய்திகள்

தருமபுரி தபால் நிலையத்தில் ஆர்வமுடன் தேசியக்கொடிகளை வாங்கிச் செல்லும் பொதுமக்களை படத்தில் காணலாம். 

தபால் நிலையங்களில் தேசிய கொடியை ஆர்வமுடன் வாங்கி சென்ற பொதுமக்கள்

Published On 2023-08-11 15:19 IST   |   Update On 2023-08-11 15:19:00 IST
  • தேசிய கொடியை இணையதள முகவரியை பயன்படுத்தி ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம் என தபால் துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.
  • சுதந்திர தினவிழா கொண்டாடுவதற்காக ஆர்வமுடன் தேசியக்கொடிகளை வாங்கிச் சென்றனர்.

தருமபுரி, 

பிரதமர் மோடி சுதந்திர தின விழாவை யொட்டி அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை பறக்கவிட்டு கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைவருக்கும் இந்திய தேசிய கொடி எளிதில் கிடைக்கும் பொருட்டு தருமபுரி கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் விற்பனை செய்ய உள்ளோம். இதன் விலை ரூ.25 மட்டுமே. ஜி.எஸ்.டி கிடையாது.

தேசிய கொடியை https//www.epostoffice.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம் என தபால் துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் தருமபுரி தபால் நிலையத்தில் தேசியக்கொடி விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. தேசிய கொடியினை தபால் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினவிழா கொண்டாடுவதற்காக ஆர்வமுடன் தேசியக்கொடிகளை வாங்கிச் சென்றனர்.

Tags:    

Similar News