உள்ளூர் செய்திகள்

தற்ெகாலை செய்துகொண்ட மாசிலாமணி.

'சஸ்ெபன்ட்' ஆன ஊராட்சி செயலாளர் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2022-08-31 13:25 IST   |   Update On 2022-08-31 13:25:00 IST
  • சரிவர பணிக்கு செல்வதில்லை என எழுந்த குற்றச்சாட்டு காரணமாக அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
  • மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள கூரத்தாங்குடி ஊராட்சி மேலநாகலூர் காலனித் தெருவைச் சேர்ந்தவர் மாசிலாமணி (வயது44).

இவர் கூரத்தாங்குடி ஊராட்சி செயலராக பணியில் இருந்த நிலையில், சரிவர பணிக்கு செல்வதில்லை என எழுந்த குற்றச்சாட்டு காரணமாக கீழ்வேளூர் வட்டார வளர்ச்சி அலுவலரால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் வெளியூர் சென்றிருந்த அவரது மனைவி வீட்டிற்கு திரும்பி வந்தபோது மாசிலாமணி தூக்கு மாட்டி

இறந்திருப்பது கண்டு அலறினார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாசிலாமணி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இது குறித்து அவரது மனைவி ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் வலிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News