உள்ளூர் செய்திகள்

மெய்நிகர் செவிப்பொறியில் புத்தகங்களை காணும் மாணவிகள்.

சாத்தான்குளம் அரசு கிளை நூலகத்தில் மெய்நிகர் நூலகம் திறப்பு

Published On 2022-11-04 08:57 GMT   |   Update On 2022-11-04 08:57 GMT
  • மெய்நிகர் நூலகம் திறப்புவிழா தூத்துக்குடி மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ் குமார் தலைமையில் நடை பெற்றது.
  • விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் இராம.கோபால கிருஷ்ணர் அரசு கிளை நூலகத்தில் மெய்நிகர் நூலகம் திறப்புவிழா தூத்துக்குடி மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ் குமார் தலைமையில் நடை பெற்றது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பெண்கள் கல்லூரி முதல்வர் சின்னத்தாய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.பொத்தக்காலன்விளை நூலகர் நல்நூலகர் விருது பெற்ற சுப்பிரமணியன் வரவேற்றார்.

பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர். மிதிவண்டி வழி விழிப்புணர்வு பரப்புரையாளர் மாடசாமி கவுரவிக்கப்பட்டார்.

வாசகர் வட்டம் தலைவர் கவிஞர் நடராசன், யோகா பயிற்றுநர் ராஜலட்சுமி, ஓய்வுபெற்ற அஞ்சலக அலுவலர் அனந்த கிருஷ்ணன்,புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பவுலின்,வட்டார மனிதநேய நல்லிணக்கப் பெருமன்றம் செயலாளர் பால்துரை உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் யோகா பயிற்றுநர் கமலம், வாசகர் வட்ட துணைத்தலைவர் பொறியாளர் கனகராஜ், அ.தி.மு.க. முன்னாள் ஒன்றியச் செயலாளர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நூலகர் சித்திரைலிங்கம் மெய்நிகர் நூலகம் குறித்து செய்முறை விளக்கம் அளித்தார். வாசகர் வட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பிரேம்குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News