உள்ளூர் செய்திகள்
டவுன் காட்சி மண்டபம் அருகில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ள நாவல்பழங்களை படத்தில் காணலாம்.
நெல்லையில் விற்பனைக்கு குவிந்த நாவல் பழங்கள்
- நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாவல் பழங்கள் விற்பனை தொடங்கி உள்ளது.
- கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்தும் நெல்லைக்கு அதிக அளவில் நாவல் பழங்கள் வந்துள்ளது.
நெல்லை:
சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு அரிய மருந்தாக மருத்துவ குணம் கொண்டது நாவல் பழம். தற்போது நாவல் பழம் சீசன் தொடங்கி உள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் நெல்லை, வண்ணார்பேட்டை, டவுன், பாளை மற்றும் புறநகர் பகுதிகளிலும் நாவல் பழங்கள் விற்பனை தொடங்கி உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெல்லை மாவட்டத்திற்கு நாவல் பழங்கள் கொண்டு வரப்படுகின்றன. கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்தும் நெல்லைக்கு அதிக அளவில் நாவல் பழங்கள் வந்துள்ளது. இவை கிலோ சுமார் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.