என் மலர்
நீங்கள் தேடியது "novel fruits"
- நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாவல் பழங்கள் விற்பனை தொடங்கி உள்ளது.
- கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்தும் நெல்லைக்கு அதிக அளவில் நாவல் பழங்கள் வந்துள்ளது.
நெல்லை:
சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு அரிய மருந்தாக மருத்துவ குணம் கொண்டது நாவல் பழம். தற்போது நாவல் பழம் சீசன் தொடங்கி உள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் நெல்லை, வண்ணார்பேட்டை, டவுன், பாளை மற்றும் புறநகர் பகுதிகளிலும் நாவல் பழங்கள் விற்பனை தொடங்கி உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெல்லை மாவட்டத்திற்கு நாவல் பழங்கள் கொண்டு வரப்படுகின்றன. கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்தும் நெல்லைக்கு அதிக அளவில் நாவல் பழங்கள் வந்துள்ளது. இவை கிலோ சுமார் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
உடுமலை சுற்றுப்பகுதியில், வர்த்தக ரீதியாக நாவல் பழ மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது குறைவாகவே உள்ளது.கிருஷ்ணகிரி ,ஆந்திரப் பகுதியிலிருந்து நாவல்பழம் கிலோ ரூ.300க்கு வாங்கி வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
உடுமலை:
உடுமலை பகுதியில் உள்ளூர் வரத்து இல்லாததால் பிற மாவட்டங்களிலிருந்து நாவல் பழங்களை வாங்கி உடுமலைப்பேட்டையில் வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.
உடுமலை சுற்றுப்பகுதியில், வர்த்தக ரீதியாக நாவல் பழ மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது குறைவாகவே உள்ளது. இருந்தாலும் கிராமங்களில் புறம்போக்கு நிலங்கள் மற்றும் ரோட்டோரங்களில் பராமரிக்கப்படும் மரங்களில் இருந்து பெறப்படும் நாவல் பழங்களை சேகரித்து நகரப்பகுதியில் விற்பனை செய்வது வழக்கம். இந்த நிலையில் பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கிய நாவல் பழத்துக்கு தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது, எனவே பிற மாவட்டங்களிலிருந்து கோடைகால சீசனில் நாவல்பழம் வரவழைக்கப்பட்டு உடுமலை பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனை செய்ய தள்ளுவண்டி வியாபாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
தற்போது கிருஷ்ணகிரி ,ஆந்திரப் பகுதியிலிருந்து நாவல்பழம் கிலோ ரூ.300க்கு வாங்கி வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
வியாபார ரீதியாக விளைநிலங்களில், வரப்பு மற்றும் தனிப் பயிராகவும் உடுமலைப் பகுதி விவசாயிகள் ஒட்டுரக நாவல் பழ மரக்கன்றுகளை நடவு செய்து வருகின்றனர்.
இவ்வாறு மரங்கள்நடவு அதிகரித்தால் இன்னும் சில ஆண்டுகளில் அனைத்து சீசன்களிலும் நாவற்பழங்கள் மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.






