காரைக்கால் என்.ஐ.டியில் நேபாளத்தைச்சேர்ந்த தொழிலாளி தற்கொலை:போலீசார் விசாரணை
- கிளாஸ் பிரசாத் சௌத்ரி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- அவர் கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரி வித்தார்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருவேட்டக்குடியில் உள்ள புதுச்சேரி என்.ஐ.டியில், நேபாளத்தை சேர்ந்த கிளாஸ் பிரசாத் சௌத்ரி (வயது43) என்பவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று என்.ஐ.டி. யில் காவலாளியாக வேலை செய்யும் திருவேட்டக்குடி கன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மருத முத்து என்பவர், பணிக்கு சென்று, என்.ஐ.டி நிர்வாக கட்டிடம் எதிரே பொருட்கள் வைத்தி ருக்கும் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, கிளாஸ் பிரசாத் சௌத்ரி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து, என்.ஐ.டி. அதிகாரி ஜெயராமனிடம் இது குறித்து தகவல் தெரிவித்தார். அவர் கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரி வித்தார். அதன்பேரில், போலீ சார் தற்கொலை செய்து கொண்ட கிளாஸ் பிரசாத் சௌத்ரியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோத னைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து கிளாஸ் பிரசாத் சௌத்ரி யுடன் பணிபுரிந்து வரும் வட மாநில தொழி லாளர்களி டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.