உள்ளூர் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் விளையாட்டில் சாதனை படைத்தவர்கள் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்

Published On 2022-06-11 09:38 GMT   |   Update On 2022-06-11 09:38 GMT
  • இவ்விருதானது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தின விழா அன்று இந்திய ஜனாதிபதியால் புதுடெல்லி ராஷ்டிரபதி பவனில் வழங்கப்படுகிறது.
  • விருதிற்கான விண்ணப்பங்கள் இணைய தள முகவரியான www.padmaawards.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கல்வி, கலை, வணிகம் மற்றும் தொழில், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், சமூக நலன், பொதுநலத்துறை ஆகிய ஏதேனும் ஒரு துறையில் சாதனை படைப்பவர்களுக்கு பத்ம விருதுகளான "பத்ம பூஷன்", "பத்மஸ்ரீ " ஆகிய விருதுகள் வழங்கப்படுகிறது.

இவ்விருதானது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தின விழா அன்று இந்திய ஜனாதிபதியால் புதுடெல்லி ராஷ்டிரபதி பவனில் வழங்கப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் விளையாட்டில் சாதனை படைத்தவர்களிடமிருந்து இவ்விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விருதிற்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்கள் இணைய தள முகவரியான www.padmaawards.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களின் 3 நகல்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அண்ணா விளையாட்டு அரங்கம், பாளையங்கோட்டை, நெல்லை -2 என்ற முகவரியில் வருகிற 25-ந்தேதி மாலை 5 மணிக்குள் அலுவலக நேரத்திலோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்கள் பெற 0462-2572632 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்கள் அடங்கிய உரை மேல் சம்பந்தப்பட்ட விருதினை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

தகுதியான விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டரின் பரிந்துரையுடன் சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News