உள்ளூர் செய்திகள்

தி.மு.க. இளைஞரணி ஆறுமுகராஜாவுக்கு எழிலன் எம்.எல்.ஏ. திராவிட மாடல் புத்தகத்தை வழங்கிய காட்சி.

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. இளைஞரணி பயிற்சி பாசறை கூட்டம்

Published On 2022-11-05 09:14 GMT   |   Update On 2022-11-05 09:14 GMT
  • பாசறை கூட்டத்திற்கு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
  • தொண்டர்களுக்கு திராவிட மாடல் புத்தகத்தை எழிலன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

நெல்லை:

நெல்லையில் மத்திய மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் பாளையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். திராவிட இயக்க வரலாறு குறித்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட டாக்டர் எழிலன் எம்.எல்.ஏ., மாநில சுயாட்சி குறித்து சூரிய கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினர்.

இந்த நிகழ்ச்சியில் இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு திராவிட மாடல் புத்தகத்தை எழிலன் எம்.எல்.ஏ. வழங்கினார். தொடர்ந்து திராவிட மாடல் ஆட்சி குறித்து நிர்வாகிகள் பேசினர்.

இதில் மேயர் சரவணன், துணை மேயர் ராஜு, தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிப்பாண்டியன், கூட்டுறவு பேரங்காடி சேர்மன் பல்லிக்கோட்டை செல்லத்துரை, மத்திய மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாயா, மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், இளைஞரணி ஆறுமுகராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News