தமிழ்நாடு செய்திகள்

GOLD PRICE TODAY: அதிரடியாக விலை குறைந்த தங்கம், வெள்ளி - எவ்வளவு தெரியுமா?

Published On 2026-03-04 09:58 IST   |   Update On 2026-03-04 09:58:00 IST
  • நேற்று ஒரே நாளில் தங்கம் விலையில் 2 முறை மாற்றம் இருந்தது.
  • தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேலை தாக்குதலை தொடர்ந்து, அதற்கு ஈரான் வளைகுடா நாடுகள் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது பதிலடி தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வந்த தங்கம் விலை நேற்று சற்றே குறைந்தது.

நேற்று ஒரே நாளில் தங்கம் விலையில் 2 முறை மாற்றம் இருந்தது. தங்கத்தின் விலை நேற்று காலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ.1,25,200-க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.15,650-க்கும் விற்பனையானது. நேற்று மாலை தங்கம் விலை மேலும் சரிவை சந்தித்தது. மாலையில் சவரனுக்கு ரூ.1,480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 1,23,720 ரூபாய்க்கும், ஒரு கிராம் ரூ.15,465 ரூபாய்க்கும் விற்பனையானது.

இந்நிலையில் தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,120 குறைந்து ரூ.1,21,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.265 குறைந்து ரூ.15,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.295-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.315-க்கும், பார் வெள்ளி 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

3-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,23,720

2-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,25,280

1-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,26,200

28-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,24,400

27-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,200

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

3-03-2026- ஒரு கிராம் ரூ.315

2-03-2026- ஒரு கிராம் ரூ.315

1-03-2026- ஒரு கிராம் ரூ.325

28-02-2026- ஒரு கிராம் ரூ.320

27-02-2026- ஒரு கிராம் ரூ.295

Tags:    

Similar News