உள்ளூர் செய்திகள்

ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் கடத்திய 36 கிலோ கஞ்சா பறிமுதல்

Published On 2026-03-04 11:27 IST   |   Update On 2026-03-04 11:27:00 IST
  • லக்கேஜ் வைக்கும் ரேக்கில் 5 பைகளில் பண்டல்களில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
  • சென்னை ஆவடியில் உள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

மேற்குவங்க மாநிலம், ஹவுராவிலிருந்து கர்நாடக மாநிலம், பெங்களூர் வரை செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடி-ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்கள் இடையே இன்று வந்து கொண்டிருந்தது.

இந்த ரெயிலின் பின்பக்கம் உள்ள பொது ஜன பெட்டியில் கஞ்சா கடத்தி வருவதாக ஜோலார்பேட்டை ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஷீன் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் 6 பேர் கொண்ட பாதுகாப்பு படை போலீசார் ஆம்பூர் அருகே பொது ஜன பெட்டியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது லக்கேஜ் வைக்கும் ரேக்கில் 5 பைகளில் பண்டல்களில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசார் உடனடியாக அவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 36 கிலோ கஞ்சாவை ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையம் எடுத்து வந்தனர்.

இதுதொடர்பாக வழக்குபதிவு செய்த ரெயில்வே போலீசார் கஞ்சா கடத்தி வந்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 36 கிலோ கஞ்சாவை சென்னை ஆவடியில் உள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News