உள்ளூர் செய்திகள்

பயிற்சி வகுப்பை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தொடங்கி வைத்து பேசினார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு

Published On 2023-04-11 09:52 GMT   |   Update On 2023-04-11 09:52 GMT
  • விரைவில் 2 பேர் ரஷ்யா செல்ல உள்ளனர்.
  • 16 அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவக்கல்லூரியில் பயின்று வருகின்றனர்.

மதுக்கூர்:

தஞ்சாவூர் மாவட்ட த்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி தொடக்க விழா பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் மதுக்கூர் மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.

இந்த பயிற்சி வகுப்பை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தொடங்கி வைத்து பேசினார்.

நீட் தேர்வை எவ்வாறு எளிதில் எதிர்கொள்வது என்பது பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

ராக்கெட் அறிவியலில் தேர்வாகி ராக்கெட் ஏவு தளத்திற்கு செல்ல இருக்கும் மாணவன் சந்தோஷை வாழ்த்தி பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தஞ்சை மாவட்டத்தில் 9 மாணவர்கள் ராக்கெட் அறிவியலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விரைவில் இரண்டுபேர் ரஷ்யா செல்ல உள்ளனர்.

அதில் ஒருவர் மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளியை சேர்ந்தவர்.

இன்னொருவர் பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி என்றார்.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார்.

பட்டுக்கோட்டை மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணா மூர்த்தி, மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாஷ், உதவி தலைமை ஆசிரியர் மாணிக்கம் ஆகியோர் நீட் தேர்வு குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.

இதேப்போல் தஞ்சாவூரில் அரண்மனை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பழனிவேல், கும்பகோணத்தில் நாச்சியார் கோவில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் கும்பகோணம் மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் தலைமை ஆசிரியர் அல்லி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கடந்த ஆண்டு இப்பயிற்சியின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 16 அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு ரூ.1 லட்சம் மதிப்பில் நீட் தேர்வு பயிற்சி கையேடுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

Tags:    

Similar News