உள்ளூர் செய்திகள்

ஊத்தங்கரை அருகே பாலீஸ் போடுவது போல் நடித்து பெண்ணிடம் 4 பவுன் செயின் திருட்டு

Published On 2022-08-13 15:32 IST   |   Update On 2022-08-13 15:32:00 IST
  • கால் கொலுசை நன்றாக பாலீஷ் போட்டு கொடுத்துள்ளார்.
  • அந்த நபர் நூதன முறையில் பெண்ணிடம் இருந்து தங்க செயினை திருடி கொண்டு தப்பி சென்றுள்ளார்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த மல்லிப்பட்டியை சேர்ந்தவர் துரை. விவசாயியான இவரது மனைவி அஸ்வினி (வயது23). நேற்று மதியம் ஒரு மர்ம நபர் துரை வீட்டிற்கு வந்து செயின் பாலிஷ் போடுவதாக கூறியுள்ளார்.

இதனை நம்பிய அஸ்வினி தனது காலில் அணிந்து இருந்த கொலுசை கொடுத்துள்ளார். கால் கொலுசை நன்றாக பாலீஷ் போட்டு கொடுத்துள்ளார். பின்னர் கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க நகையை கொடுத்துள்ளார். அந்த நபர் நூதன முறையில் பெண்ணிடம் இருந்து செயினை திருடி கொண்டு தப்பி சென்றுள்ளார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெருபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News