உள்ளூர் செய்திகள்

ராயக்கோட்டை அருகே தீயணைப்பு துறை சார்பாக தற்காப்பு செயல்விளக்கம்

Published On 2022-07-19 16:10 IST   |   Update On 2022-07-19 16:10:00 IST
  • ராயக்கோட்டை அருகே தீயணைப்பு துறையினரின் முகாம் நடந்தது.
  • மக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வை வழங்கினர்.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை தீயணைப்பு மீட்பு பணிநிலையத்தின் சார்பாக தென் மேற்கு பருவமழை முன்னிட்டு, ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களுக்கு மழை, வெள்ள காலங்களில் நீர்நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில், நீர் சூழந்துள்ள இடங்களிலிருந்து, தங்களை எவ்வாறு பாதுகாத்துகொள்வது குறித்து செயல்விளக்கம் செய்து காட்டினர்.

ராயக்கோட்டை-சூளகிரி சாலை, ராமாபுரம் கிராமம் அருகே உள்ள தென்பென்ணை ஆற்றில், அவர்களுக்கு செயல்முறை விளக்கம், மற்றும் ஒத்திகை பயிற்சி செய்து காண்பித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

இதில் தீயாணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) செல்வம் தலைமையில் வீரர்கள் ஒத்திகை செய்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News