உள்ளூர் செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட மாட்டுவண்டியை படத்தில் காணலாம்.
- பண்ருட்டி அருகே கெடிலம் ஆறு பகுதியில் மாட்டுவண்டியில் மணல் கடத்தப்பட்டது.
- புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்ந ந்தகுமார்தலைமையில் போலீசார் நேற்றிரவுதீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர் .
கடலூர்:
கெடிலம் ஆற்று பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக புகார் வந்ததை தொடர்ந்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்ந ந்தகுமார்தலைமையில் போலீசார் நேற்றிரவுதீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை நிறுத்தினர்.
போலீசாரை கண்டவுடன்மாட்டு வண்டியை ஓட்டிவந்தவர் மாட்டு வண்டியை நிறுத்தி விட்டு ஓடினார். உடனே போலீசா ர்வண்டி சோதனைசெய்தனர். அதில் அரசுஅனுமதியின்றி திருட்டு தனமாக அரையூனிட் மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.உடனடியாக மாட்டுவண்டியை பறிமுதல் செய்து தப்பி ஓடியகாந்தலவாடியை சேர்ந்த மாயவனைதேடி வருகின்றனர்.