உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே ஒரே குடும்பத்தில் 2 பேர் திடீர் மாயம்

Update: 2022-06-30 09:38 GMT
  • பண்ருட்டி அருகே ஒரே குடும்பத்தில் 2 பேர் திடீர் மாயமானார்.
  • ஜெயகாந்தியின் கடைசி இருமகன்களுக்கு இடையே சம்பவத்தன்றுதகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அவர்கள் ஒருவரை யொருவர் தாக்கி கொண்டனர்.

கடலூர்:

 பண்ருட்டி அருகே வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது47). இவரது மனைவி அமுதா (42). இருவருக்கும் திருமணமாகி 15 வருடம் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று சிவக்குமார் சலூன் கடைக்கு சென்று வருகிறேன், என்று கூறிவிட்டு சென்ற வர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர்பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக சிவக்குமார் தாய்ஜெயகாந்தி முத்தாண் டிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து சிவக்குமாரை தேடி வருகின்றனர்.

இதனிடையே ஜெயகாந்தியின் கடைசி இருமகன்களுக்கு இடையே சம்பவத்தன்றுதகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அவர்கள் ஒருவரை யொருவர் தாக்கி கொண்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த கடைசி மகனான சுரேஷ்குமார் மாயமானார். இதுகுறித்து தந்தை செல்வராஜ் அளித்த புகாரின் பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்

Tags:    

Similar News