உள்ளூர் செய்திகள்

மத்திகிரி அருகே மனைவியை தீ வைத்து எரித்து கொலை செய்த கணவருக்குஆயுள் தண்டனை

Published On 2022-07-19 16:00 IST   |   Update On 2022-07-19 16:00:00 IST
  • மனைவியை தீ வைத்து எரித்து கணவர் கொலை செய்தார் .
  • கோர்ட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி அருகே மனைவியை தீ வைத்து எரித்து கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி அடுத்த இடையநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(37). வெல்டர். இவரது மனைவி திரிவேணி(27). சுரேஷுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், அவரது மனைவி திரிவேணிக்கும், அவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி உடலில் தீக்காயங்களுடன் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திரிவேணி மேல்சி கிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். முன்னதாக திரிவேணி, போலீசாரிடம் தன்னை அடித்து, தன் மீது மண்ணெண்ணையை ஊற்றி கணவர் சுரேஷ் தீ வைத்ததாக மரண வாக்குமூலம் அளித்தார். அதன்படி அப்போதைய மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சுரேஷை கைது செய்தார். இவ்வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி (பொ) மோனிகா தீர்ப்பு வழங்கினார்.

அதில், குற்றம்சா ட்டப்பட்ட சுரேசிற்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் கூடுதலாக 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜரானார்.

Tags:    

Similar News