கிருஷ்ணகிரி அருகே உடல் நல பாதிப்பால் விஷம் குடித்து பெண் சாவு
- மற்றொரு சம்பவத்தில் அரசு பஸ் டிரைவர் தற்கொலை.
- உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சரகம் கூத்தூர் ரிங் ரோடு பகுதியை சேர்ந்தவர் நசீர் பாஷா . இவரது மகள் சர்மிளா (வயது 17). கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு பல இடங்களில் சிகிச்சை பார்த்து வந்தனர். ஆனால் சரியாகவில்லை. இதையடுத்து பெங்களூரு சென்று சிகிச்சை பெற்றும் பலன் இல்லை. இதனால் மனம் உடைந்த சர்மிளா விஷம் குடித்துவிட்டார். சேலம் அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சர்மிளா உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல கிருஷ்ணகிரி அருகே குருவரப்பள்ளி போலீஸ் சரகம் முல்லையூரை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் பொன்ராஜ்(45) தனது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குருவரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.