உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே வங்கிக்கணக்கு மூலம் வாலிபரிடம் மோசடி- பரிசு கிடைத்துள்ளதாக ஏமாற்றி அபேஸ்
- தபால் மூலம் வந்த ஒரு தகவலில் கோடிக்கணக்கான ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக கூறினார்.
- இதை நம்பி பிரேம்குமார் வெவ்வேறு 4 கணக்குகளில் ரூ.15,60,000 செலுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரி.
ஓசூர் அருகேயுள்ள அலசநத்தம் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 38). தனியார் நிறுவன ஊழியர்.
இவருக்கு தபால் மூலம் வந்த ஒரு தகவலில் கோடிக்கணக்கான ரூபாய் பரிசு விழுந்துள்ளதாகவும், அதை பெறுவதற்கு குறிப்பிட்ட வங்கி கணக்குகளில் பணம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதை நம்பி பிரேம்குமார் வெவ்வேறு 4 கணக்குகளில் ரூ.15,60,000 செலுத்தியுள்ளார். ஆனால் அந்த தகவலின்படி பரிசு கிடைக்கவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.