உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே வெவ்வேறு சம்பவங்களில் கூலித்தொழிலாளி, விவசாயி பலி
- அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.
- கிணற்றில் தவறி விழுந்த முருகன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சரகம் தாசிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (70).விவசாயி. சம்பவத்தன்று எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்த முருகன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து அவரது மகள் வித்யாமாலா தந்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஓசூர் அருகே உத்தரப்பள்ளி போலீஸ் சரக பகுதியில் சுப்பிரமணி(50) என்ற விவசாயி ராயக்கோட்டை சாலை வழியாக சென்றபோது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து உத்தரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.