உள்ளூர் செய்திகள்

ஓசூர் அந்திவாடி விளையாட்டு மைதானம் அருகில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுவதை நிறுத்தாவிடில் போராட்டம் நடத்தப்படும்- முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பேட்டி

Published On 2022-12-01 14:59 IST   |   Update On 2022-12-01 14:59:00 IST
  • திடக்கழிவு கட்டிடத்தில் இருந்து வந்த ரசாயனம் பரவி தான் மாணவர்கள் பாதிப்பு அடைந்தனர் என்று தெரிகிறது.
  • திடக்கழிவு பிரிக்கும் கட்டிடம் கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

ஓசூர்,

ஓசூர் அந்திவாடி விளையாட்டு மைதானம் அருகே, மாநகராட்சி நிர்வாகம் சார்பில்

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தும் வகையில் கட்டிடம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்குபகுதி மக்கள், விளையாட்டு வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளருமான பாலகிருஷ்ண ரெட்டி, விளையாட்டு மைதானத்தை நேரில்

பார்வையிட்டு, பின்னர் நிருபர் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

, இந்த இடம் ஒரு டிரஸ்டுக்கு சொந்தமான இடம். இந்த இடத்தில் மாநகராட்சி கட்டிடம் கட்டுவதற்கோ, கல்லூரி கட்டுவதற்கோ அனுமதி அளிக்கவில்லை. இந்த இடத்தில் சர்வதேச விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் கிரிகெட், ஹாக்கி, ஸ்கேட்டிங், டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களை இங்கு நடத்த வரைவு போடப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்த இடத்தில் திடக்கழிவு பிரிக்கும் கட்டிடம் கட்டும் பணியை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இந்த பணியை உடனே நிறுத்த வேண்டும். மேலும் இங்கு சர்வதேச விளையாட்டு அரங்கம் கட்டவேண்டும்.

கடந்தசில நாட்கள் முன்பு காமராஜ் காலனியில் உள்ள மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மயக்கம் அடைந்து சிகிச்சை பெற்றனர். எதனால் அவர்கள் மயக்கம் அடைந்தார்கள்? என இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. பள்ளியின் அருகே இருக்கும் மாநகராட்சியின் திடக்கழிவு கட்டிடத்தில் இருந்து வந்த ரசாயனம் பரவி தான் மாணவர்கள் பாதிப்பு அடைந்தனர் என்று தெரிகிறது.

எனவே இங்கு திடக்கழிவு பிரிக்கும் கட்டிடம் கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் கட்சி தலைமையின் அனுமதி பெற்று, மாபெரும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வில், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், தெற்கு பகுதி செயலாளரும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான பி.ஆர்.வாசுதேவன், மாநகராட்சி மண்டல தலைவர் ஜெயபிரகாஷ், நகரமைப்பு குழு தலைவர் அசோகா, அதிமுக கிழக்குபகுதி செயலாளர் , ராஜி, நாகொண்டபள்ளி கூட்டுறவு வங்கி தலைவர் கே.சாக்கப்பா, நடைபயிற்சியாளர்கள் சங்க தலைவர் மல்லேஷ், செயலாளர் லிங்கம், செந்தில் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News