உள்ளூர் செய்திகள்
காந்திகுப்பம் அருகே அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்
- ஆத்திரமடைந்த சலாமும், பிரித்தும் சேர்ந்து அரசு பஸ் டிரைவர் சதீஷை சரமாரியாக தாக்கினர்.
- பெங்களூருவை சேர்ந்த 2 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காந்திகுப்பம் போலீஸ் சரகம் வெள்ளக்குட்டை பகுதியில் சதீஷ் என்பவர் அரசு பஸ்சை ஒட்டி சென்றார். அப்போது பெங்களூருவிலிருந்து வேலூர் நோக்கி மாருதி காரில் சலாம் (வயது 20), பரீத் (62) ஆகியோர் சென்றனர். வழி விடுவது தொடர்பாக சதீசுக்கும் சலாமுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த சலாமும்,பிரித்தும் சேர்ந்து அரசு பஸ் டிரைவர் சதீஷை சரமாரியாக தாக்கினர்.
இதில் காயமடைந்த சதீஷ் சிகிச்சைக்காக பர்கூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து சதீஷ் தந்த புகாரின்பேரில் காந்திகுப்பம் போலீசார் சலாம் மற்றும் பரீத் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.