உள்ளூர் செய்திகள்

கல்லாவி அருகே பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர் கைது

Published On 2022-07-26 15:22 IST   |   Update On 2022-07-26 15:22:00 IST
  • மூர்த்தியும், ராகவியும் காதலித்து திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
  • வேறு ஒருவரை திருமணம் செய்ததால் கத்தியால் ராகவியை மூர்த்தி சரமாரியாக குத்தினார்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மூர்த்தி (வயது30). இவரும் அதே பகுதியை சேர்ந்த ராகவி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் மூர்த்தி கேரளாவுக்கு வேலைக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்த போது ராகவி, முருகவேல் என்பவரை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த மூர்த்தி ராகவியை சந்தித்து தன்னிடம் பழகிவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்வதா? என தகராறு செய்துள்ளார்.

பின்னர் தான் செலவு செய்த பணத்தை திருப்பிக்கொடு என்று கேட்டுள்ளார். அப்போது தான் வைத்திருந்த கத்தியால் ராகவியை மூர்த்தி சரமாரியாக குத்தினார்.

இதில் காயம் அடைந்த ராகவியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து கல்லாவி போலீசார் வழக்கு பதிவு செய்து மூர்த்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News