உள்ளூர் செய்திகள்

தேசிய தரச்சான்று வழங்கப்பட்டுள்ள நிலையில் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள், ஊழியர்களுடன் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின்.


தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று

Published On 2022-10-05 08:51 GMT   |   Update On 2022-10-05 08:51 GMT
  • தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை 557 படுக்கை வசதிகள், பல்வேறு சிகிச்சை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.
  • ஆய்வு கடந்த ஜூலை மாதம் 13, 14 , 15-ந்தேதிகளில் நடைபெற்றது.

தென்காசி:

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை 557 படுக்கை வசதிகள், பல்வேறு சிகிச்சை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக தேசிய தரச்சான்று பெறுவதற்கான முயற்சியை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

தேசிய தரச்சான்று

இதற்காக மருத்துவ மனையின் தரத்தினை உயர்த்துவதற்காக நோயாளிகளின் நலனுக்காக உயர் சிறப்பான சிகிச்சை கிடைப்பதற்கும், தேவையான பல்வேறு மருத்துவ உபகரணங்கள் மருத்துவமனையில் நிறுவப்பட்டு வந்தது.

மேலும் பல்வேறு நன்கொடையாளர்கள் மூலம் மருத்துவமனையின் பல்வேறு கட்டிடங்களை புதுப்பித்து வர்ணம் பூசி புதுமையாக்கினர்.

மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் மற்றும் உறைவிட மருத்துவர் வழிகாட்டுதலுடன் தரச்சான்று பெறுவதற்கு மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்துதுறை பணியாளர்களும் முழு ஒத்துழைப்பும் கொடுத்து தேசிய தரச்சான்று பெற்று முதன்மையான மருத்துவ மனையாக மாற்றிடும் முயற்சியில் ஈடுபட்டனர் .

இந்த ஆய்வு கடந்த ஜூலை மாதம் 13, 14 , 15-ந்தேதிகளில் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் நேற்று முன்தினம் இணையதளம் வாயிலாக அறிவிக்கப்பட்டது . இதில் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அனைத்து தரத்தினையும் பெற்ற சிறந்த மருத்துவ மனைக்கான சான்றினை பெற்ற முதன்மை மருத்துவமனையாக தேசிய தர குழுவினரால் அறிவிக்கப்பட்டது.

இதில் மருத்துவ மனையின் அவசர சிகிச்சை பிரிவு, வெளிநோயாளிகள் சிகிச்சைப்பிரிவு, பிரசவ அறை , பிரசவ வார்டு உள்ளிட்ட 18 பிரிவுகளின் தரமும் சிறந்ததாக உள்ளதாக தேசிய தரக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் இத்தரத்தினை மேற்படுத்த உதவிய மருத்துவமனை அனைத்து துறை பணியாளர்கள், பொதுமக்களுக்கும் மருத்துவமனையின் நிர்வாகம் சார்பாக மருத்துவ மனை கண்காணிப்பாளர் நன்றியினை தெரிவித்தார் .

மேலும் பொது மக்களுக்கு தரமான சேவையை வழங்குவதில் மருத்துவமனை நிர்வாகமும், பணியா ளர்களும் எப்போதும் தயாராக இருப்பதாகவும், மருத்துவமனையின் இத்தரத்தினை எப்போதுமே நிரந்தரமாக பேணிக்காத்து சிறப்பான சேவையினை வழங்கு வதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு மருத்துவமனையின் கண்கா ணிப்பாளர் ஜெஸ்லின் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News