உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல்

Published On 2023-06-09 07:28 GMT   |   Update On 2023-06-09 07:28 GMT
  • நாமக்கல் மாவட்டத்திற்கான மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  • ஊரகப் பகுதிக்கு என 8 உறுப்பினர்களும் நகர்ப்புற பகுதிக்கு என 4 உறுப்பினர்க ளும் என மொத்தம் 12 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்திற்கான மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஊரகப் பகுதிக்கு என 8 உறுப்பினர்களும் நகர்ப்புற பகுதிக்கு என 4 உறுப்பினர்களும் என மொத்தம் 12 உறுப்பினர்கள் தேர்ந்தெ டுக்கப்பட உள்ளனர்.

ஏற்கனவே வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் இத்தேர்தலில் போட்டியிடவும் வாக்களிக்கவும் தகுதியானவர்கள். இத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மாவட்ட ஊராட்சி அலுவலகம், அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களிலும் கிடைக்கும்.

வேட்புமனுக்களை நாமக்கல் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள தேர்தல் நடத்தும் அலுவலர், உதவித்தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவல கத்தில் தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலராக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளர் செல்வக்குமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊரகப் பகுதிக்கான உதவித்தேர்தல் நடத்தும் அலுவலராக உதவி திட்ட அலுவலர் செல்வி நிய மிக்கப்பட்டுள்ளார். நகர்ப்பு றத்தில் நகராட்சிக்கு ஊரக வளர்ச்சி உதவி இயக்கு நர்(தணிக்கை) உமா மற்றும் பேரூராட்சி மாவட்ட ஊராட்சி செயலர் ரவிச்சந்தி ரன் ஆகியோர் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்க ளாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நாளை (சனிக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 3 மணிக்குள் தங்களின் வேட்புமனுவினை தாக்கல் செய்யலாம். தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 12-ந்தேதி அன்று காலை 11 மணிக்கு பரிசீ லிக்கப்படும். வேட்புமனு வினை திரும்ப பெற்றுக் கொள்ள விரும்புவர்கள், அதற்கான அறிவிப்பை 14-ந்தேதி மாலை 3 மணிக்குள் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவித் தேர்தல் நடத்தும் அலுவல ரிடம் வழங்கலாம்.

தேர்தல் 23-ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல்தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை நடைபெறும். வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தகவலை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News