உள்ளூர் செய்திகள்

தூர்வாரும் பணியினை கண்காணிப்பு அலுவலர் விஜயராஜ் குமார் ஆய்வு செய்த காட்சி.

நாமக்கல் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளை நீர்வளத்துறை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு

Published On 2023-06-11 08:49 GMT   |   Update On 2023-06-11 08:49 GMT
  • தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த காவிரி டெல்டா மாவட்டங்களுக்கான சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
  • தூர்வரும் பணிகளை விரைந்து முடிக்க கூடுதல் எந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என நீர்வளத்துறை செயற்பொறியாளரை கண்காணிப்பு அலுவலர் வலியுறுத்தினார்.

நாமக்கல்:

நாமக்கல் தாலுக்கா, புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த காவிரி டெல்டா மாவட்டங்களுக்கான சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

வள்ளி அணைக்கட்டிற்கு மேல்புறம் மற்றும் கீழ்புறம், பொடங்கம் கிராமம், தடுப்பணைக்கு கீழ்புறம் மற்றும் மேல்புறம், கட்டியண்ணன் கோவில் அணைக்கட்டிற்கு மேல்புறம், கட்டியண்ணன் கோவில் அணைக்கட்டிற்கு கீழ்புறம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றும் வரும் தூர்வாரும் பணியினையும், தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர் விஜயராஜ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, தூர்வரும் பணிகளை விரைந்து முடிக்க கூடுதல் எந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என நீர்வளத்துறை செயற்பொறியாளரை கண்காணிப்பு அலுவலர் வலியுறுத்தினார்.

Tags:    

Similar News