மாணிக்கவாசக பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
பரமத்திவேலூரில் பேட்டை மாணிக்கவாசக பெருமானுக்கு குருபூஜை விழா
- திருஞான சம்பந்தர் மடாலயத்தில் ஆனி மாத மகம் நட்சத்திர மான நேற்று மாணிக்கவாசக பெருமானுக்கு குருபூஜை விழா நடைபெற்றது.
- மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள பேட்டை திருஞான சம்பந்தர் மடாலயத்தில் ஆனி மாத மகம் நட்சத்திர மான நேற்று மாணிக்கவாசக பெருமானுக்கு குருபூஜை விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை திருவாசகம் முற்றோதலும், தொடர்ந்து பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகமும் நடை பெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. மதியம் 1 மணிக்கு மகேஸ்வர பூஜை யும், அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதமும் வழங்கப்பட்டது.
இதில் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.