திருச்செங்கோட்டில் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
திருச்செங்கோட்டில் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஆர்ப்பாட்டம்
- திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு நாமக்கல் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
- ஒப்பந்த தொழிலாளர் முறையை கைவிட கோரியும் உள்ளாட்சித் துறை நிர்வாகத்தை கண்டித்து தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு நாமக்கல் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.தூய்மை பணி யாளர்களின் ஊதியத்தை குறைப்பதையும், நிரந்தர பணியாளர்களின் எண்ணிக் கையை குறைப்ப தையும், ஒப்பந்த தொழி லாளர் முறையை கைவிட கோரியும் உள்ளாட்சித் துறை நிர்வா கத்தை கண்டித்து தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் ஜெயராமன். தலைமை வகித்தார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் .அன்புமணி தொடங்கி வைத்தார். ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் தன சேகரன் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட வெளியீட்டு செயலாளர் ராமகிருஷ்ணன் ஏஐடியுசி மாவட்ட பரப்புரை செய லாளர் ஜெயராமன் ஏஐடி யுசி ஆட்டோ சங்கத் தலை வர் சுப்பிரமணியன் இந்திய கம்யூனிஸ்டு நகர செயலா ளர் சுகுமார்.சிபிஐ ஒன்றிய செயலாளர் முனுசாமி வாழ்த்துரை வழங்கினர்.
நன்றியுரை கோபிராஜ் ஏஐடியுசி கட்டட சங்க துணை செயலாளர் கோபி ராஜ் நன்றி கூறினார்.ஆர்ப்பாட்டத்தில் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.