உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; வாலிபர் சாவு

Published On 2023-01-22 14:35 IST   |   Update On 2023-01-22 14:35:00 IST
  • ராஜேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
  • சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆதினங்குடி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 27).

இவர் கடந்த 1-ம் தேதி இரவு திருமருகல் முடிக்கொண்டான் ஆற்று பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் ராஜேஷ் தலையில் பலத்த காயமடைந்தார்.

காயமடைந்த ராஜேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News