உள்ளூர் செய்திகள்
மூலைக்கரைப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் காயம்
- நாராயணன் தனது தாயார்,மகனுடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
- சுப்பையாதாஸ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், நாராயணனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
களக்காடு:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள மேலலெத்திகுளத்தை சேர்ந்தவர் நாராயணன். இவர் நேற்று தனது தாயார் சுந்தராட்சி (வயது70), மகன் சங்கர பாண்டியனுடன் மோட்டார் சைக்கிளில் மூலைக்கரைப்பட்டிக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
லெத்திகுளம் அருகே வந்த போது, எதிரே அதே ஊரை சேர்ந்த பண்டாரம் மகன் சுப்பையாதாஸ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், நாராயணனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சுந்தராட்சியும், அவரது பேரன் சங்கரபாண்டியனும் படுகாயம் அடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது தொடர்பாக விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த சுப்பையாதாஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.