உள்ளூர் செய்திகள்
நாங்குநேரி அருகே ஓட்டலில் பணம் திருட்டு
- அன்னலெட்சுமி மருதகுளம் மெயின் ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
- ஒட்டலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ.4,500-ஐ திருடி சென்று விட்டனர்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள மருதகுளம் கீழத்தெருவை சேர்ந்தவர் சேகர் மனைவி அன்னலெட்சுமி (வயது 51). இவர் மருதகுளம் மெயின் ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவில் வியாபாரம் முடிந்த தும், அன்னலெட்சுமி ஓட்ட லை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இரவில் மர்ம நபர்கள் ஒட்டல் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த ரூ.4ஆயிரத்து 500-ஐ திருடி சென்று விட்டனர்.
மறுநாள் காலையில் ஓட்டலை திறக்க வந்த அன்ன லெட்சுமி, ஒட்டலில் திருட்டு நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி ஓட்டலில் பணம் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.