உள்ளூர் செய்திகள்

கும்பகோணம் சக்கரபாணி கோவிலில் மாசிமக விழா கொடியேற்றம் நடைபெற்றது.

கும்பகோணம் பகுதி வைணவ கோவில்களில் மாசிமக விழா கொடியேற்றம்

Published On 2023-02-26 15:23 IST   |   Update On 2023-02-26 15:23:00 IST
  • பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி வீதியுலா நடைபெறும்.
  • தேரோட்டமும் அதனை தொடர்ந்து தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.

பட்டீஸ்வரம்

கும்பகோணத்தில் அமைந்துள்ள வைணவ ஆலயங்களான சுதர்சனவல்லிதாயார், விஜயவல்லிதாயார் சமேத சக்கரபாணிசுவாமி, அம்புஜவல்லிதாயார் சமேத ஆதிவராஹப் பெருமாள், ருக்மணிதாயார், ஸத்யபாமாதாயார், செங்கமலத் தாயார் சமேத இராஜ கோபாலசுவாமி (பெரிய கடைத்தெரு) மற்றும் தோப்புத்தெரு இராஜகோபாலசுவாமி (இந்த கோவிலில் மட்டும் கொடியேற்றம் கிடையாது) ஆகிய வைணவ திருக்கோயி ல்களில் மாசிமகப் பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.இன்று முதல் இவ்வால யங்களில் தினசரி காலையில் பல்லக்கிலும், மாலையில் இந்திர விமானம், சந்திரபிரபை, சேஷம், நான்காம் நாள் ஓலைச்சப்பரத்தில் கருட சேவை, அனுமந், யானை, புன்னைமரம், குதிரை ஆகிய வாகனங்களில் வண்ண மின் விளக்குகள் ஒளிர மங்கல இன்னிசை முழங்க பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருள திருவீதியுலா திருகாட்சி நடைபெறும்.

மாசி மகத்தன்று சக்கரபாணி திருகோவி லில் காலையில்திருத்தே ரோட்டமும், ராஜகோ பாலசுவாமி, ஆதிவராஹப் பெருமாள் ஆலயங்களில் ரதாரோஹணமும் அதனை தொடர்ந்து தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News