கோப்பு படம்
ஆண்டிபட்டி அருகே மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் திடீர் சாவு
- போதை மறுவாழ்வு மையத்தில் இருந்தவர் திடீரென ரத்தவாந்தி எடுத்ததால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.
- இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிபட்ட:
தேவதானப்பட்டி அருகே கொடைக்கானல் சாலை அம்சாபுரத்தை சேர்ந்தவர் முருகன்(52). இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் வீட்டில் பிரச்சிைன ஏற்பட்டது. எனவே குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட ஆண்டிபட்டி அருகே வைகை அணை சாலையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார்.
அங்கு முருகன் திடீரென ரத்தவாந்தி எடுத்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆண்டிபட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி பாரஸ்ட்ரோடு பகுதியை சேர்ந்தவர் போஸ்(60). இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் மதுஅருந்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் வயிற்றுவலி ஏற்பட்டு மனஉளைச்சலில் இருந்தார். இந்த நிலையில் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேனி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.