உள்ளூர் செய்திகள்

மாயமான இளம்பெண் மீட்பு

Published On 2022-07-13 14:58 IST   |   Update On 2022-07-13 14:58:00 IST
  • சேலம் அருகே உள்ள மூங்கில்பாடி அடுத்த கொல்லப்பட்டி பகுதியில் மாயமான இளம்பெண் மீட்டனர்.
  • இவரை சேலம் கன்னங்குறிச்சி யில் உள்ள போதிமரம் ஆதரவற்றோர் இல்லத்தில் பெற்றோர்கள் சேர்த்து விட்டனர்.

கொண்டலாம்பட்டி:

சேலம் அருகே உள்ள மூங்கில்பாடி அடுத்த கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரது மகள் வனிதா (வயது 38). இவர் சற்று மனநலம் பாதித்தவர். இவரை சேலம் கன்னங்குறிச்சி யில் உள்ள போதிமரம் ஆதரவற்றோர் இல்லத்தில் பெற்றோர்கள் சேர்த்து விட்டனர்.அங்கிருந்த இவர் நேற்று காலை திடீரென மாயமானார். இதுகுறித்த தகவலின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் இன்று காலை செட்டி சாவடி பகுதியில் சுற்றித் திரிவதாக வந்த தகவலை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வனிதாவை மீட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தனர்.

Tags:    

Similar News