உள்ளூர் செய்திகள்

மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

பாதாள சாக்கடையை சரி செய்யக்கோரி பெண்கள் திடீர் சாலை மறியல்

Published On 2023-07-26 13:50 IST   |   Update On 2023-07-26 13:50:00 IST
  • பாதாள சாக்கடையை சரி செய்யக்கோரி பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • மாநகராட்சி வாகனம் வரவழைக்கப்பட்டு பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்து கழிவுநீர் அப்புறப்படுத்தப்பட்டது.



பாதாள சாக்கடை கழிவுநீர் தெருவில் ஓடுவதை படத்தில் காணலாம்.

 மதுரை

மதுரையில் வணிக நிறு வனங்கள், ஒர்க் ஷாப்கள் நிரம்பிய மைய பகுதியாக சிம்மக்கல் உள்ளது. 50-வது வார்டு பகுதியான இங்கு மாவட்ட மைய நூலகமும் உள்ளது. இதன் அருகில் உள்ள அபிமன்னன் கிழக்கு மேற்கு தெருவில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த தெருவில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு மாதமாக கழிவுநீர் தெருவில் ஆறாக ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.

முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். குழந்தைகளுக்கு வயிற்று போக்கு, காய்ச்சல் ஏற்பட்ட தாகவும், குடிநீரில் கழிவு நீர் கலந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்த பகுதி மக்கள் மாநகராட்சியில் புகார் செய்ததாகவும், ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை திடீரென சிம்மக்கல் மெயின் ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியார் பஸ் நிலையம், ரெயில் நிலையம் ஆகிய பகுதிக ளுக்கு செல்லும் முக்கிய சாலை என்பதால் பெண்க ளின் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இத னால் கடுமையான போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது.

இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத் தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதையடுத்து மாநகராட்சி வாகனம் வரவழைக்கப்பட்டு பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்து கழிவுநீர் அப்புறப்படுத்தப்பட்டது.


Tags:    

Similar News