உள்ளூர் செய்திகள்

மதுரை-ராமேசுவரம் இடையே முன்பதிவில்லாத தினசரி ரெயில்

Published On 2022-06-18 09:47 GMT   |   Update On 2022-06-18 09:47 GMT
  • மதுரை-ராமேசுவரம் இடையே முன்பதிவில்லாத தினசரி ரெயில் 22-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.
  • அதன்படி ராமேசுவரத்தில் இருந்து தினந்தோறும் காலை 11 மணி அளவில் புறப்படும்.

மதுரை

மதுரை- ராமநாதபுரம் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் சேவை வருகிற 22-ந்தேதி முதல் தொடங்குகிறது.

அதன்படி ராமேசுவரத்தில் இருந்து தினந்தோறும் காலை 11 மணி அளவில் புறப்படும் ெரயில் முறையே பாம்பன் (11.14), மண்டபம் (11.29), மண்டபம் கேம்ப் (11.34), உச்சிபுளி (11.44), வாலாந்தரவை (11.54), ராமநாதபுரம் (12;03), சத்திரக்குடி (12.17), பரமக்குடி (12.28), சூடியூர் (12.43), மானாமதுரை மதியம் (1.20), ராஜகம்பீரம் (1.33), திருப்பாச்சேத்தி (1.44), திருபுவனம் (1.54), சிலைமான் (2.04), மதுரை கிழக்கு (2;15) வழியாக மாலை 2.40 மணிக்கு மதுரை வந்து சேரும்.

அதேபோல மதுரையில் இருந்து 12.30 மணிக்கு புறப்படும் ரெயில் முறையே மதுரை கிழக்கு (12.37), சிலைமான் (12.47), திருபுவனம் (12.56), திருப்பாச்சேத்தி (மதியம் 1.07 மணி), ராஜகம்பீரம் (1.17), மானாமதுரை (1.28), சூடியூளர் (1.39), பரமக்குடி (1.54), சத்திரக்குடி (2.09), ராமநாதபுரம் (2.24), வாலாந்தரவை (2.33), உச்சிப்புளி (2.44), மண்டபம் கேம்ப் (2.54), மண்டபம் (2.59) பாம்பன் (3.12) வழியாக ராமேசுவரத்திற்கு மாலை 4.10 மணிக்கு செல்லும்.

இந்த தகவலை மதுரை கோட்ட ெரயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News